வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் முப்பதாவது வருட விழா

1996 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் முப்பதாவது வருட விழாவானது அருட்தந்தை போல் சற்குணநாயகம் தலைமையில் நேற்று(20) இடம்பெற்றது.
வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவினால் இன மத பேதமின்றி சிறார்கள் மற்றும் மக்களின் உள்ளங்களை ஆற்றுப்படுத்தி நல்வழிப்படுத்தும் நிறுவனமாக செயற்பட்டு வருகின்றது.

மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறார்களின் பிரச்சினைகளை இனம் கண்டு அவர்களுக்குத் தேவையான மன ஆற்றுப்படுத்தும் சேவைகளை வழங்கி வருவதுடன் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மக்களுக்குத் தேவையான உள ஆற்றுப்படுத்தும் சேவைகளையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் போது முப்பதாவது ஆண்டுக்கான இலச்சினை அடங்கிய பதாதை திறந்து வைக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *