கிளிநொச்சி மத்திய கல்லூரியில் புதிதாக அனுமதிக்கப்பட்ட தரம் 06 மாணவர்கள் வரவேற்பு

தரம் 06 மாணவர்களை பாடசாலையில் இணைத்துக் கொள்ளும் வைபவரீதியான நிகழ்வு நாடுபூராகவும் இன்று நடைபெறுகின்றது.
கிளிநொச்சி மத்திய கல்லூரியிலும் புதிதாக அனுமதிக்கப்பட்ட தரம் 06மாணவர்கள் வரவேற்கப்பட்டனர்.
பாடசாலைக்கு முன்பாகவுள்ள மீனாட்சி அம்மன் ஆலயத்திலிருந்து மாணவர்கள் பெற்றோர்களால் மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் வாத்திய இசையுடன் பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டனர்.
தரம் 07 மாணவி அகலிசை தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலய அதிபர் கேதீஸ்வரன் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக பழைய மாணவர் சங்க செயலாளரும் பொறியியலாளருமான கடம்பசீலன், பாடசாலை அபிவிருத்தி சங்க உப செயலாளரான ஜோன் மெரினா ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த பாடசாலை அதிபர் சவரி பூலோகராஜா, உபஅதிபர் பரராஜசிங்கம் சசிரதன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *