வாழைச்சேனையில் போதைப் பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனையில் போதைப்பொருளுடன் நேற்று(16) இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கொழும்பிலிருந்து வருகை தந்த விஷேட பொலிஸ் குழுவினரே இவர்களைக் கைது செய்துள்ளனர்.

 

இவர்களிடமிருந்து 70கிராம் ஐஸ் போதைப்பொருள், 60கிராம் ஹெரோயின், 150கிராம் கேரள கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

 

கைது செய்யப்பட்ட இருவரும் பிறைந்துரைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், மிக நீண்ட நாட்களாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிய வருகின்றது.

 

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் சான்றுப்பொருட்களையும் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *