ஐ.நா மனித உரிமை ஆணையாளரை வரவேற்றலும் கவனயீர்ப்பு நடவடிக்கையும் நாளை(25) திருகோணமலையில் இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வானது நாளை காலை 09.30 மணிக்கு திருகோணமலை ஆளுநர் செயலகம் முன்பாக இடம்பெறவுள்ளது.
‘எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும், எமது மக்களின் வலிகளையும் அமைதியான முறையில் எடுத்துரைக்க வாரீர்’ எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாண பாதிக்கப்பட்டோர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம், சிவில் சமூக அமைப்பு மற்றும் வடக்கு கிழக்கு சமூக இயக்கம் என்பன இணைந்து இந் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர்.
அனைத்து ஆர்வலர்கள், குடிமை அமைப்புகள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பொது
மக்களை இதில் கலந்துகொண்டு ஒற்றுமையை வெளிப்படுத்துமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


