இலங்கை வந்த விமானத்தை கடத்தப் போவதாக மிரட்டிய நபர் கைது

இந்தோனேசியாவில் இருந்து இலங்கை வந்த விமானத்தை கடத்தப்போவதாக தொலைபேசியில் பொய்யான தகவல் வழங்கிய நபரை வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 42 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

வெள்ளவத்தை 33வது வீதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

சந்தேக நபர் விமான நிலைய பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

 

விரோத முறைப்பாடாக இதனை பொலிஸார் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *