கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை ரம்பொட கெரண்டிஎல்ல பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்தவர்களில் இதுவரையில் 23 பேர் உயிரிழந்திருந்தனர்.
இவர்களின் ஆத்ம சாந்திக்காகவும் மேலும் ரம்பொட பிரதேசத்தில் இயற்கை அனர்த்தங்கள், ஏனைய விபத்தில் இறந்த அனைத்து உயிரினங்களுக்கும் நேற்றுமுன்தினம்(09) விபத்து ஏற்பட்ட இடத்தில் ஆற்றங்கரையில் யாழ்ப்பாணம் சாய் குலத்தை பிறப்பிடமாகவும் கனடா டொராண்டோவை வசிப்பிடமாகவும் கொத்மலை பனம்கம்மான கரகஸ்தலாவில் தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சாய்குல அறக்கட்டளைகள் ஸ்தாபகரும் சமூக சேவையாளருமான. தேவேந்திர குமாரசாமி திருக்குமரனின் சொந்த செலவில் ஆத்ம சாந்திக்கான மிருத்யுஞ்சய ஹோமம் நடாத்தப்பட்டது.


