கடலோர ரயில் மார்க்கத்தில் வேலைநிறுத்தம் இல்லை

இன்று (06) நண்பகல் 12 மணி முதல் கடலோர ரயில் சேவையில் இருந்து விலகுவதற்கான தீர்மானத்தை லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

 

கடலோர ரயில் மார்க்கத்தில் உள்ள சமிக்ஞை அமைப்பின் குறைபாட்டிற்கு தீர்வு காணக் கோரி, இன்று நண்பகல் 12 மணி முதல் சேவையில் இருந்து விலக சங்கம் தயாராகியிருந்தது.

 

எனினும், இன்று காலை ரயில்வே பொது முகாமையாளருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் நேர்மறையான பதில் கிடைத்ததையடுத்து, இந்தத் தீர்மானத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க சங்கம் முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *