கிளிநொச்சி கரைச்சிக் கோட்டப் பாடசாலைகளின் விளையாட்டுப்போட்டி

கிளிநொச்சி கரைச்சிக் கோட்டப் பாடசாலைகளின் விளையாட்டுப்போட்டி நேற்று(04) பிற்பகல் கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

குறித்த விளையாட்டு நிகழ்வானது கரைச்சி கோட்டக் கல்விப்பணிப்பாளர் சுப்பிரமணியம் தர்மரத்தினம் தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி. எம். அசேல திஸாநாயகேவும், சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி இலங்கை வங்கியின் முகாமையாளர் பாலஸ்கந்தன் உபேந்திரா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் பரராஜசேகரம் பார்த்தீபன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அத்துடன் கௌரவ விருந்தினர்களாக அன்னலட்சுமி ஏரம்பு, நிறஞ்சன் டேகலா, தியாகேஸ்வரி கணேஸ்வரநாதன் மற்றும் ஓய்வுநிலை பிரதி அதிபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *