கட்டிடம் ஒன்றின் மேல்மாடியிலிருந்து கீழே விழுந்து குடும்பஸ்தர் பலி ; வெள்ளவத்தையில் சம்பவம்

கொழும்பு – வெள்ளவத்தை, இராமகிருஷ்ணா பிரதேசத்தில் உள்ள ஐந்து மாடி கட்டிடம் ஒன்றின் மேல்மாடியிலிருந்து கீழே விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

 

இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (04) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

உயிரிழந்தவர் மட்டக்களப்பு – இருதயபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

 

குடும்பஸ்தர் மூன்று வருடங்களுக்கு முன்னர் வெள்ளவத்தை, இராமகிருஷ்ணா பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்கு பணியாளராக சென்றுள்ளார்.

 

இந்நிலையில் இந்த குடும்பஸ்தர் ஐந்து மாடி கட்டிடத்தின் மேல்மாடியில் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இது தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *