கம்பி வலையில் சிக்கி சிறுத்தை படுகாயம்!

நோர்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேயிலைத் தோட்டப் பகுதியில் இரைதேடி வந்த சிறுத்தையொன்று கம்பி வலையில் சிக்கிப் படுகாயமடைந்துள்ளது.

இன்று (12) குறித்த பகுதியில் நீரோடைக்கு அருகிலுள்ள புதரில் கட்டப்பட்டிருந்த கம்பி வலையில் நன்கு வளர்ந்த சிறுத்தையொன்று சிக்கியுள்ளது.

வலையிலிருந்து தப்பிக்க முயன்றபோது அதன் வயிற்றுப் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சிறுத்தை அருகிலுள்ள பாறையொன்றின் மீது படுத்திருப்பதாகவும், அதற்கு மயக்க மருந்து செலுத்தி பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *