பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்!

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,

மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை கீழ்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

(சட்டத்தரணி – சித்ரால் பெர்னாந்து புத்தளம் புகையிரதப் பாதையில் புகையிரத சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரித்தல்).

(லசித் பாஷண கமகே – வீதி ஒதுக்குப் பிரதேசங்களில் மரங்களை நடுதல், அறிவியல் ரீதியாக முகாமை செய்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றுக்கான முறையான வழிமுறையொன்றைத் தயாரித்தல்).

(சட்டத்தரணி ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி – இலங்கையின் சகல கல்வியியற் கல்லூரிகளையும் பல்கலைக்கழக பீடங்களாக மாற்றுதல்).

(ரவீந்திர பண்டார – சூட்டிகை வலுசக்திக் கட்டமைப்பையும் சூட்டிகை மின் மானிகளையும் அறிமுகம் செய்தல்).

(ரோஹண பண்டார – நீச்சல் திறமைகளை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்றை தயார் செய்தல்).

(உபுல் கித்சிறி – உடவளவை பிரதேசத்தை சுற்றுலா வலயமாக பிரகடனப்படுத்தல்).

(சட்டத்தரணி ஹிருணி விஜேசிங்க -நீர்த்தாமரை செடியின் பரவலை சாதகமான வகையில் கட்டுப்படுத்துதல் மற்றும் அழித்தல்).

இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *