2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்காக முன்மொழியப்பட்ட மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் செய்யப்படமாட்டாது என தேசிய கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்காக முன்மொழியப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பங்குதாரர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று (05) நடைபெற்றது.
அந்த கலந்துரையாடலில் நீர்த்தேக்கங்களில் நிலவும் நீர் கொள்ளளவு மட்டங்கள் மற்றும் எல் நினோ காலநிலைமைகளின் கீழ் கணிக்கப்பட்டுள்ள சாதாரண மட்டத்தை விட அதிக மழைவீழ்ச்சியைக் கருத்தில் கொண்டு 2026 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதிக்கு மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என NSO (Pvt) Ltd நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
இதன் போது 2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் எதுவும் முன்மொழியப்படவில்லை.

