மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தமடு- மாதவனை பண்ணையாளர்களுக்கான சரியான நீதியை தற்போதைய அரசாங்கமும், பொலிஸாரும் நிலைநாட்ட வேண்டும் என தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு திங்கட்கிழமை(01.11.2026) மட்டக்களப்பு கச்சேரியின் முன்னால் மாபெரும் போராட்டம் இடம்பெற்றது. இதேவேளை மாட்ட செயலகத்தைச் சூழ பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சறிநேசன், இ.சிறிநாத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், செ.கஜேந்திரன், அரிசாகிர் மௌலானா, மட்டக்களப்பு மாநகர மேயர் சிவம்.பாக்கியநாதன், மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், பண்ணையதளர்கள், பொதுமக்கள் மற்றும் வடக்கு மாகாணத்திலிருந்து வருகைதந்திருந்த சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொலநறுவை மாட்டத்திலிருந்து வந்த சிங்கள மக்கள் என பலர் இதன்போது காலந்த கொண்டு மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தனர்.
இதன்போது போராட்டக்காரர்கள் தமது கண்டனத்தை வெளிப்படுத்தி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன்னால் தமது போராட்டத்தை ஆரம்பித்தனர்.
மக்களின் கோரிக்கைக்கு தீர்வு தர வேண்டும், பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், அபிவிருத்தி குழுவின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்து, மேய்ச்சல் தரை நிலம் எமக்கு வேண்டும், சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்று, மகாவலியே வெளியேறு என்ற கோசத்தை எழுப்பி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
சட்டவிரோதமாக மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவனையில் குடியேறியவர்களால் பண்ணையாளர்களுக்கும், பசுக்களும் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தின் போது பண்ணையாளர்கள் 7 பேரை மாத்திரம் மாட்ட அரசாங்க அதிபர் அழைத்து உரையாடினார். இதேவேளை அரசாங்க அதிபருடன் நடைபெற்ற கலந்துரையாடல் தமக்கு திருப்தியளிக்கவில்லை என அந்த கலந்துரையாடலுக்குச் செந்துவந்த பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இது இவ்வாறு இருக்க மயிலத்தமடு- மாதவனை மேய்ச்சல் தரை பண்ணையாளர்களுக்கு நீதி கோரிய போராட்டத்தை முன்னின்று நடாத்திய 11 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டு ஒன்றியத்தின் இணைப்பாளர் அருட்பணி லுக்ரோன் பாதர் தெரிவித்துள்ளார்.
தனக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன், சிறிநாத் சிவில் சமூக செயற்பாட்டு ஒன்றியத் தலைவர் சிவயோகநாதன், பண்ணையாளர் சங்கத்தலைவர் நிமலன், விவசாயிகள் சம்மேளனத்தலைவர் மோகன் ஆகியோருக்கு எதிராகவே நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்த தடை உத்தரவை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

