சர்வதேச மகளிர் தினத்தன்று கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் வீதிகளை மறித்து வீதி நாடகம் நடத்திய சம்பவம் தொடர்பாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டை ஜனவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த முறைப்பாடு இன்று (02) கொழும்பு மேலதிக நீதிவான் லஹிரு சில்வா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, குறித்த சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
இதனையடுத்து, வழக்கை மீண்டும் ஜனவரி 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்ட நீதிவான், அன்றைய தினம் சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெறுவது தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.

