அம்பாறையில் கால்வாயில் விழுந்து 60 வயது நபர் உயிரிழப்பு!

அம்பாறை, ரஜகல்தென்ன – நுகேலந்த இடைமார்க்கத்தில் நீர்ப்பாசனக் கால்வாய்ப் பாலத்திற்கு அருகில் சைக்கிளில் பயணித்த ஒருவர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை (26) காலை இடம்பெற்றுள்ளது.

நுகேலந்த நோக்கிச் சைக்கிளில் பயணித்தவர் கால்வாயில் விழுந்து படுகாயமடைந்த நிலையில், செனரத்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ரஜகல்தென்ன பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் பக்கிஎல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *