ஒருநாள் கிரிக்கெட் போட்டி – பாகிஸ்தான் த்ரில் வெற்றி

பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டியில் பாக்கிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

நேற்று ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பாட்டம் செய்த இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 241 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதனை தொடர்ந்து, 242 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய பாகிஸ்தான் அணியும் இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 9 விக்கெட்டுகளை சரியவிட்டது.

154 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த பின்னர் இங்கிலாந்து அணிக்கே வெற்றி என எல்லோருமே நினைத்திருந்தனர்.

ஆனால் 8வது வீரராக களமிறங்கிய ஷதாப் கான் கடைசிவரை விட்டுக்கொடுக்காமல் போராடி, 96 பந்தில் 13 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என பந்தாடி, பாகிஸ்தான் அணியை 1 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

2027 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில், பாகிஸ்தானில் நடந்துவரும் முத்தரப்பு தொடரில் இங்கிலாந்து, இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய 3 அணிகள் மோதிவருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *