தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.30,000 தீபாவளி முற்பணம்: செந்தில் தொண்டமான் கோரிக்கை!

தீபாவளி தமிழ் மக்கள் அனைவராலும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை. தோட்டத் தொழிலாளர்களுக்கு இவ்வருட தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, முற்பணமாக 30,000 ரூபாவை வழங்க வேண்டும் என இலங்கை முதலாளிமார் சம்மேளனத்திடம் (Employers’ Federation of Ceylon – EFC) இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வருடம் தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 25,000 ரூபா வழங்கப்பட்ட நிலையில், இவ்வருடம் அதிகரித்துள்ள அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, முற்பணத் தொகையை 30,000 ரூபாவாக அதிகரித்து வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *