ஞானசார தேரருக்காக ஐந்தாவது நாளாகத் தொடரும் சத்தியாகிரகப் போராட்டம்!

கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி பிக்குகள் குழுவொன்றினால் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாகிரக போராட்டம் இன்று 5ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 16ஆம் திகதி பிற்பகல் விஹாரமஹாதேவி பூங்காவுக்கு வருகை தந்த தேரர்கள் இந்த சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்ததுடன், அன்றைய தினம் அங்கு கூடாரம் ஒன்றை அமைப்பதற்கு முற்பட்ட போது பொலிஸாருக்கும் தேரர்களுக்கும் இடையே முறுகல் நிலை உருவானது.

ஞானசார தேரர் விடுதலை செய்யப்படும் வரை இவ்விடத்தை விட்டு நகரப்போவதில்லை என சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ள தேரர்கள் வலியுறுத்துகின்றனர்.

கடந்த 16ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக தங்கியிருந்த இந்த பிக்குமார், பின்னர் புத்தசாசன அமைச்சுக்கு முன்பாக சென்றதுடன் அங்கு அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

எனினும், அந்தக் கலந்துரையாடல் தோல்வியடைந்ததாகத் தெரிவித்த அவர், தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை விஹாரமஹாதேவி பூங்காவில் தங்கியிருக்கப் போவதாகத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *