இன்றைய ராசிபலன்!

மேஷம்: தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்படுவீர்கள். பகைவர்கள் விலகி, பிரச்சினைகள் தீரும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதுடன், வசதிகளும் அதிகரிக்கும்.

ரிஷபம்: நண்பர்களின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு, புதிய வாய்ப்புகள் உருவாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் காணப்படும்.

மிதுனம்: சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவிக்கிடையே இணக்கம் அதிகரிக்கும். பேச்சுத் திறமையால் காரியங்களைச் சாதிப்பீர்கள்.

கடகம்: ஆன்மிகச் சிந்தனை அதிகரிக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். மனக்குழப்பங்கள் நீங்கி, தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

சிம்மம்: மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் கவனத்துடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். பயணங்களால் லாபம் கிடைக்கும்.

கன்னி: உத்தியோகத்தில் சிறப்பாகச் செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படும்.

துலாம்: உறவினர்களின் வருகை இருக்கும். பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் வெற்றி பெறலாம். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான சந்தேகங்கள் தீரும்.

விருச்சிகம்: பணவரவு அதிகரித்தாலும் செலவுகளும் கூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கலாம். பொருட்களைப் பாதுகாப்பதில் கவனம் தேவை.

தனுசு: உத்தியோகத்தில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். குடும்பத் தேவைகளுக்காகச் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

மகரம்: குடும்ப உறவுகளில் இணக்கத்தைப் பேணுவது அவசியம். துணிச்சலுடன் செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணவரவு திருப்தி அளிக்கும். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

கும்பம்: மனக்குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பிறருக்கு உதவும்போது கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் தாமதங்கள் காணப்படலாம். திட்டமிட்டுச் செயல்பட்டால் லாபத்தை அதிகரிக்கலாம்.

மீனம்: உத்தியோகத்தில் பணிச்சுமையும் அலைச்சலும் அதிகரிக்கலாம். பணிகளை அவதானத்துடன் மேற்கொள்வது அவசியம். குடும்பத்தில் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *