மேஷம்: குடும்பத்தில் வாக்குவாதங்களைத் தவிர்த்து நிதானமாகச் செயல்படுவது நல்லது. தேவையற்ற செலவுகள் மற்றும் அலைச்சல்கள் ஏற்படலாம். தீ, ஆயுதங்கள் தொடர்பில் கவனம் தேவை.
ரிஷபம்: குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்துடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. திருமண முயற்சிகள் கைகூடுவதுடன் பணவரவும் அதிகரிக்கும்.
மிதுனம்: பிறரிடம் பேசும்போது கவனம் தேவை. பணிச்சுமை மற்றும் எதிர்பாராத சிக்கல்கள் ஏற்படலாம். கோபத்தைக் குறைத்து நிதானமாகச் செயல்படுவது நல்லது.
கடகம்: தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். தந்தையின் உடல்நலத்தில் கவனம் செலுத்துவதுடன், உறவினர்களிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
சிம்மம்: திருமண முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படுவதுடன், உறவினர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். உடல்நலத்தில் சிறிது கவனம் தேவை.
கன்னி: வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகள் கைகூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிப்பதுடன், எதிர்பார்த்த நிதியுதவியும் கிடைக்கும்.
துலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையிலான கருத்து வேறுபாடுகள் நீங்கும். சாமர்த்தியமான பேச்சால் காரியங்களில் வெற்றி பெறலாம்.
விருச்சிகம்: வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு அதிகரிப்பதுடன், உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
தனுசு: புதிய வேலை தேடுபவர்களுக்கு தாமதத்துடன் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் நெருக்கம் அதிகரித்தாலும், வாக்குவாதங்களைத் தவிர்ப்பது அவசியம்.
மகரம்: நீண்டகாலப் பிரச்சினைகள் குறைந்து நிம்மதி ஏற்படும். பணவரவு அதிகரிப்பதுடன், எதிர்ப்புகள் நீங்கி காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
கும்பம்: வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. திடீர் செலவுகள் மற்றும் காரியத் தாமதங்கள் ஏற்படலாம். மனச்சோர்வைத் தவிர்த்து செயல்படுவது நல்லது.
மீனம்: தொழில், வியாபாரத்தில் மந்தநிலை காணப்படலாம். பணவரவு தாமதமாகும் என்பதால், முக்கிய முடிவுகளை நிதானமாகச் சிந்தித்து எடுப்பது சிறந்தது.

