முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்கவும் அணியில் இடம்பெற்றுள்ள போதிலும், அவரது மருத்துவப் பரிசோதனை மற்றும் உடற்தகுதி உறுதி செய்யப்பட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

முழுமையான உடற்தகுதியைப் பெற்றால் மாத்திரமே பெதும் நிஸ்ஸங்க அணியுடன் பாகிஸ்தானுக்கு பயணிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு 20 தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்த முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *