கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் திருக்கோவில் ஆசிரியர்கள் மூவருக்கு கல்வி முதுமாணி பட்டம்

இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று (03) நடைபெற்ற நிலையில், திருக்கோவில் கல்வி வலயத்தின் திருக்கோவில் கல்விக் கோட்டத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள் மூவர் கல்வி முதுமாணி (Master of Education)) பட்டத்தைப் பெற்றுக்கொண்டனர்.

இதன்படி, திருக்கோவில் கல்விக் கோட்டத்தில் ஆசிரியர்களாகக் கடமையாற்றும் திரு. முத்துலிங்கம் நாகேஸ்வரன், திரு. தம்பிராஜா றீகன் மற்றும் திருமதி. ஷாளினி மேகசுதன் ஆகியோர் கல்வி முதுமாணி பட்டத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஆசிரியர்களாக தமது கல்விப் பணியை முன்னெடுத்துவரும் நிலையில், உயர்கல்வித் துறையில் மேற்கொண்ட முயற்சியின் பலனாக இப்பட்டத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு குறித்த ஆசிரியர்களுக்கு சக ஆசிரியர்கள், கல்வித்துறை சார்ந்தவர்கள், மாணவர்கள் மற்றும் உறவினர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *