வேர்க் ப்ரம் ஹோம் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது.!

டொலர் அழுத்தம் தீவிரம்: மீண்டும் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ திட்டம் பரிசீலனை

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் இறக்குமதிச் செலவுகளால் உருவாகியுள்ள பொருளாதார அழுத்தத்தை சமாளிக்க, கொரோனா காலத்தைப் போன்று அரச மற்றும் தனியார் துறைகளில் மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் (Work From Home) முறையை அறிமுகப்படுத்த அரசு பரிசீலித்து வருகிறது.

எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரூபாவின் மதிப்பு அண்மையில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், எரிபொருள் மற்றும் வாகன இறக்குமதிக்கான செலவுகளும் கணிசமாக அதிகரித்துள்ளன. இதனால் வெளிநாட்டு நாணயச் செலவினங்களை குறைக்கும் மாற்று வழிகளை அரசு ஆராய்ந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *