யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உயிரிழந்த கைதி ஒருவரின் சடலத்தைப் பொறுப்பேற்க அவரது குடும்பத்தினர் முன்வராத நிலையில், உடலை அரச செலவில் இறுதிச் சடங்குகள் மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உயிரிழந்த நபரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்டதாகவும், மரணம் உயிரை மாய்த்துக்கொண்டதன் விளைவாக ஏற்பட்டதாக சட்ட மருத்துவ அதிகாரி அறிக்கை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நடைமுறைகளுக்கமைய சடலத்தை அரச செலவில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

