சீரற்ற காலநிலையால் 31,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக 7,984 குடும்பங்களைச் சேர்ந்த 31,078 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 860 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 2 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. தென்மேற்கு பருவமழை வலுப்பெற்றுள்ளதால், அடுத்த சில நாட்களிலும் பல பகுதிகளில் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

