2026 ஆம் ஆண்டின் இதுவரை காலப்பகுதியில் நாடு முழுவதும் 29,589 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
சமூக மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீரவின் தகவலின்படி, மே 18 வரையான கணக்கில் 15 மரணங்கள் பதிவாகியுள்ளன. நாடு முழுவதும் 39 உயர்ஆபத்து சுகாதார பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேல் மாகாணத்தில் அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் அடுத்த இடங்களில் உள்ளன. கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மாத்தறை, காலி, களுத்துறை மற்றும் கண்டி மாவட்டங்களில் நோய் பரவல் அதிகமாக உள்ளது.
பாடசாலைகள், வேலைத்தளங்கள் மற்றும் மதஸ்தலங்களில் டெங்கு பரவல் வேகம் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாகவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

