மட்டு காந்தி பூங்காவிற்கு அருகிலுள்ள வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் நேற்று (19) மாலை 5.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த வாவியில் சடலம் ஒன்று நீரில் மிதப்பதை கண்ட பொதுமக்கள் பொலிசாருக்கு தெரியப்படுத்தினர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் ஆண் ஒருவரின் சடலம் எனவும் இதுவரை அடையாளம் காணவில்லை எனவும் அதனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *