இன்று மாலை இடியுடன் கூடிய மழை!

இலங்கையின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் இன்று (21) மாலை வேளையில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையின்படி, மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், மன்னார், வவுனியா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மாலை வேளையில் திடீர் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என்பதால், வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *