முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கைது!

சொக்கா மல்லி’ என அழைக்கப்படும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர இன்று செவ்வாய்க்கிழமை (21) நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின் போது, பிரேமலால் ஜயசேகர தனது கைத்துப்பாக்கியைக் காட்டி மரண அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் கீழேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த துப்பாக்கிக்கான அனுமதிப்பத்திரம் காலாவதியாகியிருந்தமையும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *