ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் இரண்டு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று சனிக்கிழமை (18) ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற இரண்டு கப்பல்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக கடல்சார் பாதுகாப்பு ஆதாரங்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தத் தாக்குதல்கள் யாரால் நடத்தப்பட்டன அல்லது கப்பல்களுக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் என்ன என்பது குறித்த மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடுவதாக அறிவித்துள்ள பதற்றமான சூழலில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்மை குறிப்பிடத்தக்கது.

