புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!

சித்திரை புத்தாண்டை முன்னிட்டுத் தமது ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் நலன் கருதி இன்று (10) முதல் விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த விசேட ரயில் சேவைகள் இன்று (10) முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும்.

இதன்படி, கொழும்பு கோட்டை – அநுராதபுரம், அநுராதபுரம் – காங்கேசன்துறை, மருதானை – மாத்தறை, மருதானை – பெலியத்த ஆகிய வழித்தடங்களில் இந்த விசேட ரயில்கள் இயக்கப்படவுள்ளன

இதேவேளை பெலியத்தவிலிருந்து மஹவ வரை வழக்கமாக பயணிக்கும் ரஜரட்ட ரெஜினி ரயில் சேவை புத்தாண்டு காலத்தில் அநுராதபுரம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து மஹவ வரை பயணிக்கும் அலுவலக ரயில், நாளை (11) மற்றும் நாளை மறுதினம் (12) மாத்திரம் அநுராதபுரம் வரை இயக்கப்படும்.

பொதுமக்கள் கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்வதற்கும், மீண்டும் கொழும்பு திரும்புவதற்கும் ஏதுவாக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ரயில்களுக்கு மேலதிகமாக, இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சேவைகளும் விசேடமாக முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *