புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் சிலுவைப்பாதை வழிபாடு!

உலகவாழ் கிறிஸ்தவர்களின் புனித வழிபாடுகளில் ஒன்றான இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் புனித வெள்ளியை முன்னிட்டு இன்று(03) மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.

இதேவேளை மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்திலும் பேராலய பங்குத்தந்தை ஜெயகாந்தன் தலைமையில் இந்த புனித வெள்ளி சிலுவைப்பாதை பாடுகளின் நினைவு நிகழ்வுகள் இன்று காலை இடம்பெற்றன.

புனித வெள்ளி தினத்தில் சிலுவையில் அறையப்பட்ட இயேசு பிரானின் உருவச்சிலை வாகன பேரணியாக இன்று காலை ஆலயத்தில் இருந்து ஆரம்பமான இந்த சிலுவைப்பாதை ஊர்வலமானது நகரின் பிரதான வீதிகளுடாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

இதன்போது தவக்காலத்தில் கிறிஸ்தவ மக்கள் இயேசு ஆண்டவரின் நினைவில் இருந்து வாழ்க்கையில் கைப்பற்ற வேண்டிய நெறிமுறைகள் பற்றிய விளக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் புனித வெள்ளி ஜெப வழிபாடுகளும் பக்திப்பூர்வமாக இடம்பெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *