பொலிஸ் அதிகாரி போல் நடித்து பணம் பறித்த நபர் கைது!

பொலிஸ் அதிகாரி போல் நடித்து, வர்த்தகர்களை மிரட்டி பணம் பறித்து வந்த நபர் ஒருவர், போதைப்பொருளுடன் பாணந்துறை வலான ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எனத் தன்னை அடையாளப்படுத்தி, வட்ஸ்அப் ஊடாக தங்கும் விடுதிகள் மற்றும் உணவக உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைய, நேற்று புதன்கிழமை (25) மாலை களினிகம அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் வைத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 25 கிராம் 620 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் அம்பலங்கொட பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *