எரிபொருள் நெருக்கடி தீவிரம்: ரஷ்யாவை நோக்கி இலங்கையின் புதிய முயற்சி!

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் கொள்வனவு செய்வது தொடர்பான ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் நாளை (26) இலங்கை வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சரின் இந்த வருகையை உறுதிப்படுத்திய அமைச்சர் விஜித ஹேரத், நாளை நடைபெறவுள்ள சந்திப்பில் அவரோடு முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
ரஷ்யாவிடமிருந்து அரசாங்கங்களுக்கு இடையிலான (G2G) ஒப்பந்தத்தின் அடிப்படையில் எரிபொருளைப் கொள்வனவு செய்வது குறித்து இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்யப்படுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ரஷ்ய பிரதி அமைச்சரின் வருகையின் போது இது குறித்து விரிவாக ஆராயப்படும் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *