அம்பாறை மாவட்டம், சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவில் உள்ள வளத்தாப்பிட்டி வில்லுக்குளப் பகுதிகளில் யானைகள் அதிக அளவில் தோன்றியுள்ளன. வேளாண்மை அறுவடையின் பின்னர் புதிதாக முளைக்கின்ற புல் இனங்களை உண்பதற்காக, யானைகள் காலை முதல் மாலை வரை வயல்வெளிகளை நோக்கி வருகை தந்துவிடுகின்றன.
இன்று, பெரிய யானைகள் மற்றும் குட்டிகள் என 100க்கும் மேற்பட்ட யானைகள் அப்பகுதியில் புல் உண்பதும், குட்டிகள் விளையாடுவதையும் காண முடிந்தது.
மக்கள் யானைகளின் வருகையை கவனித்து, ஊருக்குள் யானைகள் நுழையாமல் தடுப்பதற்காக சத்தங்களை எழுப்பியுள்ளனர். இதற்கிடையே, அருகிலுள்ள பொதுமக்களின் சொத்துக்களுக்கும் சில சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
2026-03-24

