உத்தரப் பிரதேசத்தின் அலிகர் சாஸ்னி கேட் பகுதியில் அரிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஆகாஷ் குமார் என்பவரின் மனைவி நீரு, பிரசவ வலியால் மாவட்ட மகளிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மார்ச் 17 ஆம் திகதி, அறுவை சிகிச்சை மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இவர்கள் இரண்டு தலை, இரண்டு கை, நான்கு கால்களுடன் பிறந்தாலும், ஒரே இதயம் கொண்டனர்.
மருத்துவர் கூறியதாவது, “குழந்தைகள் தற்போது நலமாக உள்ளனர், பால் குடித்து வருகின்றனர். ஆனால் ஒரே இதயம் இருப்பதால் எதிர்காலத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.”
பிரசவத்திற்குப் பிறகு தாயின் உடல்நிலை மோசமடைந்ததால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நீரு உயிரிழந்துள்ளார் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
2026-03-24

