சட்டவிரோதமாக சொத்துக்களைச் சேர்த்ததாக சந்தேகிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவின் பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
இதன்படி, சந்தேக நபரை மார்ச் 31 வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் வாதங்களைப் பரிசீலித்த பிறகு, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.
2026-03-24

