ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறினால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை விநியோகத்திற்கான ஒருநாள் சேவை உட்பட அனைத்துச் சேவைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று செவ்வாய்க்கிழமை (24) காலை 11.00 மணி முதல் மீண்டும் அனைத்துப் பொதுச் சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நேற்று திங்கட்கிழமை (23) ஏற்பட்ட இந்தக் கணினி அமைப்புக் கோளாறு காரணமாக, இன்றைய தினம் பொதுச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *